நான் தலைமறவாகவில்லை: அதிமுக எம்.எல்.ஏ. நட்ராஜ் ஐ.பி.எஸ்.

சென்னை:

தான் தலைமறைவாகவில்லை என்று மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நடராஜன் ஐ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பரபரப்பான சூழல் நிலவுகிறது. அ.தி.மு.க. எம்.எல்.க்களை சசிகலா தரப்பு, நட்சத்திர ஓட்டல்களில் அடைத்து வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தமிழகம் முழுதும் பல தொகுதிகளில், தங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை என்று மக்கள் காவல் துறையில் புகார் அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மயிலாப்பூர் அ.தி.மு.க. எம்.எல்.வான நடராஜ் ஐ.பி.எஸ்., “சமூகவலைதளங்களில் சிலர் பதிவிடுவது போல நான் எங்கும் தலைமறைவாகவில்லை. எனது சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம். ஜெயலலிதாதாதன் என் தலைவர். அவருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்.

என்னைத் தேர்ந்தெடுத்த மயிலாப்பூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன்.

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கவே எனது போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வாக்ுக வங்கி அரசியலில் நம்பிக்கை இல்லை. நான்

You may have missed