நவீன மயமாக்கப்படும் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்

ண்டிகர்

ந்திய விமானப்படையின் மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மின்னணு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப் பட்டு நவீன மயமாக்கப்பட உள்ளன.

இந்திய விமானப்படையில் உள்ள ஹெலிகாப்டர்களில் 90 மி-17 ரக ஹெலிகாப்டர்கள் பழைய வடிவமைப்பில் உள்ளன.   இவைகளில் மின்னணு பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப் படவில்லை.    இந்த ஹெலிகாப்டர்களின் உற்பத்தியாளர்கள் இந்த ரக ஹெலிகாப்டர்களில் மாறுதலை செய்ய இயலாது என தெரிவித்து விட்டனர்.   தற்போது இந்த ஹெலிகாப்டர்கள் தற்போது இந்திய விமானப்படையின் சண்டிகர் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் உள்ளன.

இங்கு இவைகளை ஆராய்ந்த விமானப் படை தொழில்நுட்பப் பிரிவினர் தற்போது இந்த ஹெலிகாப்டர்களில் புதிய மின்னணு சாதனங்களை பொருத்த உள்ளனர்.  பாரத் எலெக்ரானிக்ஸ் லிமிடட் நிறுவனத்துடன் ஆய்வு நடத்திய விமானப் படை இந்த விமானங்களில் மின்னணு சாதனங்கள் பொருத்துவது மிகவும் எளிது என கண்டறிந்துள்ளது.

ஏற்கனவே இரு விமானங்களில் சோதனை முறையில் இந்த மின்னணு சாதனங்களை பாரத் எலெக்டரானிக்ஸ் லிமிடெட் பொருத்தி வெற்றி கண்டுள்ளது.    இந்தப் பணி இன்னும் 48 மாதங்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    இந்த மின்னணு சாதனங்கள் மூலம் இந்த ஹெலிகாப்டர்கள் தன்னை தாக்க வரும் ஏவுகணைகளை இனம் கண்டு கொள்ளவும் அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் முடியும் என கூறப்படுகிறது.