கேரள வெள்ள உதவி : விமானப்படை கட்டணத்தால் பினராயி விஜயன் வேதனை

திருவனந்தபுரம்

கேரள வெள்ளத்தில் உதவிய விமானப்படை ரூ.34 கோடி கட்டணம் கேட்டு கடிதம் எழுதி உள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் வீடு வாசல் இழந்து தவித்தனர். மாநிலத்தில் ரூ. 31000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப் பட்டுள்ளது. ஆனால் நிவாரண நிதியாக ரூ.2683 கோடி மட்டுமே வந்துள்ளது. ஆகவே மாநிலத்தை சீரமைக்க இயலாமல் நிதித்துறை கடும் நிதிப் பற்றாக்குறையில் உள்ளது.

வெள்ளத்தில் மீட்புப் பணியில் விமானப் படையினர் தங்கள் ஹெலிகாப்டர் மூலம் ஈடுபட்டனர். கடும் வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் வீடுகளின் மாடியில் வந்து தங்கினார்கள். அவர்களை விமானப்ப்டையினர் மீட்டனர். இதற்கு பலரும் பரட்டு தெரிவித்தனர். தங்கள் வீட்டு மாடியில் ஆங்கிலத்தில் தேங்க்ஸ் என எழுதி வைத்து மக்கள் தங்கள் நன்றியை விமானப் படையினருக்கு தெரிவித்தனர்.

தற்போது வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கட்டணமாக ரூ. 33.79 கோடி அளிக்க வேண்டும் என விமானப் படை கடிதம் அனுப்பி உள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், “சென்ற ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தால் ரூ.31000 கோடி சேதம் ஏறட்டுள்ளது. தேசிய பேரிடர் நிதியாக கிடைத்தது ரூ.2683.18 கோடி ம்ட்டுமே ஆகும். இதை வைத்துக் கொண்டு மாநிலத்தை சீர் செய்ய இயலவில்லை. முதல்கட்ட நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.800 கோடி நிதி வழங்கியது.
ஆனால் மக்களுக்கு மானியவிலையில் அரிசி மண்ணெண்ணெய் வழங்கியதற்காக ரூ.290 கோடியை அதே மத்திய அரசு கேட்டுள்ளது. ஆகவே அது போக மீதப் பணம்தான் நிவாரணப் பணிகளுக்கு வரும். அத்துடன் விமானப்படை வெள்ள மிட்புப் பணிகளுக்காக ரூ.33.79 கோடி கட்டணம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. நான் இதனால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்

மத்திய அரசு உயர்மட்டக்குழுவின் முடிவை பொறுத்தே நிதி ஒதுக்கீடு செய்யும். ஆனால் இதுவரை மத்திய அரசு உயமட்டக் குழு கூட்டத்தை நடத்ஹ்டவில்லை. இதனால் நாங்கள் நம்பிக்கை இழந்துள்ளோம். வெளி நாடுகளில் இருந்து வர இருந்த ஆயிரக்கணக்கான கோடி நிதி உதவியையும் மத்திய அரசு மறுத்துள்ளது” என கூறி உள்ளார்.