விமானப் படை ஹெலிகாப்டர் மீது ஏவுகணை தாக்கி 6 பேர் உயிரிழந்த விவகாரம்: அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு

புதுடெல்லி:

விமானப் படை ஹெலிகாப்டர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில், 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக 6 விமானப் படை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி 27-ம் தேதி ஸ்ரீநகரில் விமானப் படை ஹெலிகாப்டர் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 6 வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, இந்திய விமானப்படையின் ஸ்ரீநகர் ஏர் ஆபிஸர் கமாண்டர் மற்றும் மூத்த அதிகாரி ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இது தொடர்பாக நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறுதி விசாரணை அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தின் போது பணியில் கவனக் குறைவாக இருந்ததாக, இந்திய விமானப் படை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.