டெல்லி:
விமானப் படை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது தாடி வளர்க்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமானப் படை அதிகாரியாக பணியாற்றியவர் அன்சாரி அப்தாப். கடந்த 2008&-ம் ஆண்டு நீண்ட தாடி வைத்திருந்த காரணத்தை கூறி விமானப் படையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்சாரி வழக்கு தொடர்ந்தார். நான் தாடி வைப்பது என்பது மதரீதியானது என அன்சாரி மனுவில் கூறியிருந்தார்.
அன்சாரியின் இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்து கூறிய தீர்ப்பு….. விமானப் படை அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகள், ஒழுக்கம் என்பது ஒரே சீரானதாக இருக்க வேண்டும். ஆகையால் விமானப் படை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது மதரீதியான காரணங்களுக்காக தாடி வளர்க்க கூடாது… என்று உத்தரவிட்டனர்.
மேலும் பெரிய தாடி வைத்திருந்ததற்காக அன்சாரி அப்தாப்பின் டிஸ்மிஸ் சரியானதே எனவும் அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.