ரஷ்யாவிடமிருந்து 33 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடமிருந்து 33 அதிநவீன மிக்-29 மற்றும் சுகோய்-30 ரக போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில், விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக ரஷ்யாவிடமிருந்து புதிதாக போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 ரக போர் விமானங்களையும், 12 சுகோய்-30 ரக அதிநவீன போர் விமானங்களையும் வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு வசம் உள்ள சுகோய்-30 விமானங்கள் சேதமடைந்துள்ள காரணத்தால், 12 சுகோய்-30 ரக அதிநவீன போர் விமானங்களை வாங்க உள்ளதாக இந்திய விமானப்படை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.