டில்லி: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் விமானப் படை துணைத் தளபதி காயம்

--

டில்லி:

இந்திய விமான படை துணை தளபதி தியோ தற்செயலாக துப்பாக்கியால் சுட்டு கொண்டதில் அவரது தொடையில் காயம் ஏற்பட்டது.

கடந்த ஜூலை முதல் இந்திய விமான படையின் துணை தளபதியாக இருப்பவர் எஸ்.பி. தியோ. இந்நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் சுட்டதில் அவரது தொடையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் டில்லி ராணுவ மருத்துவமனை சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக உள்ளது.

1979ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி போர் விமான விமானியாக பணியில் சேர்ந்த தியோ, துணை தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.