சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பெற்றார் விஜய்!

சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை நடிகர் விஜய் நேரில் சென்று பெற்றுக்கொண்டார். பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய மெர்சல் படத்தில் நடித்ததற்காக இந்த விருதுக்கு விஜய் தேர்வு செய்யப்பட்டார்.

award

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். இதில் விஜய் மூன்று தோற்றத்தில் நடிக்க நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் ஜோடியாகவும், எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் வெளியானம் அரசியல் கட்சியினரிடையா மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சை மிகுதியாலே மெர்சல் திரைப்படம் உலகளவில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் வசூல் சாதனை புரிந்தது. இதையடுத்து, ஐஏஆரே என்ற சர்வதேச விருது விஜய்யின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

vijay

அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. இதில் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யபப்ட்டார். அதற்கான விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்துக் கொண்டு, சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பெற்றார்.

தற்போது சர்வதே நடிகருக்கான விருதை பெறும் விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.