ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார்.

விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி,பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.

சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.

நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் சந்திரா ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு சோனு சூட் பெயரை நிர்வாகத்தினர் சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து சோனு சூட் :
”நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன். இல்லாதவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். தற்போது என்னுடைய நடவடிக்கைளுக்கு இவ்வளவு பெரிய ஒரு நிறுவனம் கவுரவம் செய்திருக்கிறது. இதன் மூலம் உதவி தேவைப்படுவோருக்குத் தொடர்ந்து உதவுதற்கான ஊக்கம் ஏற்படுகிறது” என கூறியுள்ளார்.