இனிமே IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா; தர்பார் படத்தை கலாய்க்கும் ஐஏஎஸ் அதிகாரி…!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வதுபடமான இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

நேற்று ரிலீசான இப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானது.விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதனிடையே, காவல்துறை சம்பந்தமான லாஜிக் மீறல்கள் தொடர்பாகப் பலரும் சமூகவலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன், “நாலு நாள்ள தலைவன ஃபிட்னஸ் நிரூபிக்க வச்சது தான்யா மிகப் பெரிய ஹூமன் ரைட் வைலேஷன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘தர்பார்’ படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் “ஐயா, டேய் தமிழ் இயக்குநர்களா இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா .. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது” என்று தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இவர் கலெக்டராக பணிபுரிந்த போது, மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டவர். பின்பு தமிழக அரசு முதல் பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்ட்களால் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may have missed