சென்னை:

ஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு  இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொடங்கி வைத்தார். அப்போது, போலீஸ் டிஜிபி திரிபாதி பந்து வீச, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டையை சுழற்றியடித்து போட்டியை தொடங்கினார்.

சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள், கடற்கரை கண்ணகி சிலை எதிரே உள்ள சென்னை மாநிலக் கல்லூரியில் விளையாட்டு திட்டலில் இன்று தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்த முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, வெள்ளை தொப்பியுடன் விளையாட்டு வீரர் போல வந்து அசத்தினார்.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், நிஜாமுதீன் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல்துறை தலைவர்  டி.ஜி.பி. திரிபாதி, அன்பு, பெரியய்யா, சேசாயி உள்பட 20-க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள்,  மத்திய அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அனைவரும் வெள்ளை பேன்ட், டிசர்ட் அணிந்து வந்திருந்தனர்.

விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். அவருக்கு டிஜிபி திரிகாரி,  அமைச்சர் ஜெயக்குமார்  ஆகியோர் பந்து வீசினர். அப்போது எடப்பாடி பழனிசாமி மட்டையால் பந்தை அடித்தார்.  இதைப் பார்த்த அதிகாரிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முதல்வர் கிரிக்கெட் விளையாடி யதை அங்கிருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம் என்று கூறினார்.