ம்மு

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல் அம்மாநிலத்தில் நடக்கும் கொலைகளையும் இந்துத்வா சக்தி அதிகரித்து வருவதையும் எதிர்த்து பதவி விலகி உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஷா ஃபைசல் 2010 ஆம் வருடம் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். இவர் அந்த அணியில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் இருந்துள்ளார். இவர் தனது மாநிலமான காஷ்மீரில் பணி புரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

ஃபைசல் தனது டிவிட்டரில் “மக்கள் தொகை + வகுப்பு வாதம் + கல்வி இன்மை + மது + பாலியல் + தொழில்நுட்பம் + முடியாட்சி = ரேபிஸ்தான் என கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 23 அன்று பதிவிட்டார். அதை ஒட்டி அவர் அரசுப் பணியாளருக்கான விதிமுறைகளை மீறியதாக அவர் மீது உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது.

இன்று ஷா ஃபைசல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது டிவிடரில், “காஷ்மீரில் நடந்து வரும் வன்முறைக் கொலைகளை எதிர்த்தும் இது குறித்து மத்திய அரசுஎந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாலும், இந்துத்வா சக்திகளிடம் 20 கோடி இஸ்லாமிய மக்கள் துன்புறுவதாலும், காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மையையும் கலாசாரத்தை சிர்குலைக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தும், இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதாலும், இந்தியாவில் நிலவி வரும் வெறுப்பு அரசியலை எதிர்த்தும் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என அறிவித்துள்ளார்.

ஷா ஃபைசல் ராஜினாமா குறித்து தேசிய மாநாட்டுக் கட்சித்தலைவர் ஃபரூக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்துக்கு இது ஒரு இழப்பு என குறிபிட்டுள்ளார். அத்துடன் அவர் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.