ம்பல்பூர்

ஒரிசா மாநிலத்தில் பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரிசா மாநிலம் சம்பல்பூரில் ஒரு தேர்தல் பேரணியில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி நேற்று ஹெலிகாப்டரில் வந்தார். பொதுவாக சிறப்பு பாதுகாப்பு பிரிவின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்படும் அரசியல் பிரமுகர்கள் வந்த வாகனங்கள் உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்ய சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பின்பற்றப்படுகின்றன.

கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசீன் தற்போது ஒரிசாவின் சம்பல்பூர் தொகுதி தேர்தல் கண்காணிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அவர் விதிமுறைகளை மீறி பிரதமர் வந்த ஹெலிகாப்டரை பரிசோதித்துள்ளார். இது குறித்து சோதனையின் போது அவருக்கு தெரிவிக்கப் பட்டும் சோதனையை தொடர்ந்துள்ளார்.

மேலதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம் முகமது மோசின் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சம்பல்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி முகமது மோசினை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த தகவலை தெரிவித்த ஒரிசாவின் தலைமை தேர்தல் அதிகாரி சுரேந்தர் குமார் தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றாததால் மோசின் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.