மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை:  மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி ஆட்சியர் மலர்விழி கரூர் ஆட்சியராகவும், கரூர் ஆட்சியர் அன்பழகன், மதுரை ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தருமபுரி ஆட்சியராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி ஆட்சியராக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மதுரை ஆட்சியராக இருந்த வினய், சேலம் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக வெங்கட பிரியா ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், பதிவு துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.