சென்னை:

தமிழக அரசின் நிதித்துறை(செலவினம்) செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தொல்லியல் துறை ஆணையராக இருந்தவர்.


நிதித்துறை(செலவினம்) செயலாளராக இருந்த பி.செந்தில்குமார் முதல்வரின் 3ம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வரின் 3ம் நிலை செயலாளராக இருந்த எஸ். விஜயகுமார் முதல்வரின் 2ம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவ்தாஸ் மீனா கூடுதலாக வகித்து வந்த பொதுத்துறை செயலாளர் பொறுப்புக்கு, பொதுத்துறை கூடுதல் செயலாளராக பதவி வகித்த மைதிலி கே ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.