ற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு நிறுவனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரபல மானதும் மற்றும் 108 பழமையானதுமான ஐபிஎம் நிறுவனம் சுமார் 1 லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பபி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றானது ஐபிஎம் (International Business Machine) . பழமையான இந்த நிறுவனம் தற்போது,  காலத்திற்கு ஏற்றவாறு  நிறுவனங்களையும் மாற்றி வருகிறது.   ‘கூல்’ மற்றும் ‘ட்ரெண்டி’ நிறுவனம் எனப் பெயரெடுக்கும் வகையில், சற்று வயது முதிந்த 1 லட்சம் பணியாளர்களை பழமை வாய்ந்த பன்னாட்டு நிறுவனமான ஐபிஎம் நிறுவனம்  நீக்கியுள்ளது. இது பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎம்-ன் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், வயது காரணமாக தங்களை வேலை நீக்கம் செய்தது தவறு என்று  ஐபிஎம் நிறுவனத்தின் மீது,  மூத்தப் பணியாளரான ஜோனதன் லாங்லி, ஐபிஎம் நிறுவனத்தில்  வயது அடிப்படையில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக முன்னாள் ஹைப்ரிட் க்ளவுட் (IBM Hybrid Cloud) விற்பனையாளர், ஜோனதன் லாங்லி (Jonathan Langley) வழக்கு தொடுத்திருக்கிறார்.

ஆனால், ஐபிஎம் நிறுவனம் இதை முற்றிலும் மறுத்துள்ளது. சர்வதேச அளவில் தனது பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை நீக்கியுள்ளதாகவும் இதை ஈடுசெய்ய அதிரடி ஆள்சேர்ப்புப் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

ஆனால், இந்த பணி நீக்கம் வயதை அடிப்படையாக கொண்டு நடைபெற்று உள்ளதால் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் IBM பாரபட்சம் காட்டுவதை, அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவராக இருந்த ஆலன் வைல்ட் (Alan Wild) நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார்  50,000 முதல் 1,00,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி இருக்கிறோம் என்றும்,  ஐபிஎம் நிறுவனம் பார்க்க “cool and trendy” ஆக கூகுள் மற்றும் அமேஸான் போல மில்லினியல் நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேலையை விட்டு தூக்கினோம் என்று தெரிவித்து உள்ளார்.

ஐபிஎம்  நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில், உலகம் முழுக்க வேலை பார்க்கும், தன்னுடைய மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. அதே காலங்களில் பயங்கரமாக புதிய இளைஞர்களை வேலைக்கு எடுத்திருக்கிறது என்றும் கூறி உள்ளது.