மனிதர்களின் கண்டுபிடிப்பில் பிரமாண்டம் என்பது அதிநவீன சூப்பர் கணினிகள்தான்.
அமெரிக்காவில் உள்ள ஐபிஎம் சமிட்(IBM Summit) எனப்படும் கணினிதான் உலகின் அதிவேகக் கணினி

ஒரே ஒரு விநாடியில் 200 குவாட் டிரில்லியன் (200000000000000000 )கணக்குகள் போடவல்லது. நம்ம வாயப்பாடுகள் எல்லாம் இதுக்கு ஒரு மேட்டரே இல்லை.

கொரோனா வைரஸ் பிரச்னைக்கு உலகின் அதிவேக சூப்பர் கணினியான ஐபிஎம்
நிறுவனத்தின் சமிட் என்ற பெயருடைய அதிவேக கணினியை களத்தில் இறக்கியுள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்
அமெரிக்காவின் U.S Department of Energy’s Oak Ridge National Laboratory யில் அமைந்துள்ள இந்த சூப்பர் கணினியானது இரண்டு டென்னிஸ் மைதானங்களை ஒருங்கிணத்த பரப்பளவைக்கொண்டது. இதை குளிர்விக்க விநாடிக்கு 15000 லிட்டர் தண்ணீரைக் கொண்டு குளிர்வித்துவருகின்றனர்.

இவ்வளவு அதிவேகமான கணினி எப்படி கொரோனாக்கு உதவும் என்கிறீர்களா?

இதோ வந்துட்டோம் உங்களுக்கு தௌிவாக விளக்கிட

இதுவரை வந்துள்ள கொரோனா குடும்ப வைரஸ்களுக்கு எதிராக இயங்கிய மருந்துகளில் 8000 வகையான மருந்துகள், மூலிகைகளில் உள்ள மருந்துக்கூறுகள் கொரோனா குடும்பத்து வைரஸ்களில் இருந்து மனிதர்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளன. லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துக்கூறுகள் இருந்தாலும் மனிதர்களுக்கு பின்விளைவில்லாத மருந்துக்கூறுகள் மற்றும் அரசுகள் அனுமதி அளித்த மருந்துக்கூறுகளை மட்டுமே தேர்வு செய்து இந்த சூப்பர் கணினியில் கொடுத்துள்ளார்கள்.
ஏறக்குறைய 2 நாள் கணக்கீட்டுக்குப் பிறகு 77 வகையான மருந்துக்கூறுகளை கொரோனா வைரஸ் எதிராக இயங்கும் என்று இந்த கணினி பரிந்துரை செய்துள்ளது

இந்த செயல்பாட்டை தலைமையேற்று செயல்படுத்திய டென்னிசி பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிர் இயற்பியலாளர் ஜெரோம் ஸ்மித் கூறுகையில் ’’வழக்கமாக உருவாக்கப்படும் மருந்துகள், விலங்குகளுக்கு பயன்படுத்தி சோதனை செய்தபின்னர் மனிதர்களுக்கு கொடுக்கமுடியும். இந்த ஆய்வில் உலகம் மனிதர்களுக்கு பின்விளைவுகளை கொடுக்காத மருந்துகூறுகளை மட்டுமே பகுப்பாய் செய்துள்ளோம்.எனவே சூப்பர் கணினியின் ஆய்வில் இதன் மூலம் கிடைக்கும் ஆய்வு முடிவுகளை உடனடியாக மருந்தாக மாற்றிடவும், இந்த ஆய்வில் கண்டுபிடிக்கக்கூடிய மருந்துக்கூறுகளை உடனடியாக மக்களுக்குக் கொடுத்து நோய் தொற்றின் பரவலை குறைத்திட முடியும்’’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார்

கிடைத்துள்ள ஆய்வின் அடிப்படையில் விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வினை மேற்கொண்டுவருகின்றனர்.

மேற்கண்ட இந்த கணக்கினை செய்ய சாதாரண மனிதர்களுக்கு 600 கோடி வருடமாயிருக்கும். இப்போது உள்ள சாதாரணக்கணினிகள் வழியாக செய்ய பல மாதங்கள் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

எப்படியோ மருந்தைக் கண்டுபிடிங்கப்பா வீட்டில் இருந்தா சாப்பாடு எப்படி வரும் என்று நீங்கள் சொல்வது எங்களுக்கும் கேட்கிறது 🙂

செல்வமுரளி

Image credit : internet