ஷார்ஜா: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் அமைப்பான இந்தியன் கிரிக்கெட்டர்ஸ்’ அசோசியேஷன்(ஐசிஏ) என்ற அமைப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அங்கீகரித்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்த அமைப்பானது முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமேயானது. ஆனால், இதர நாடுகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் சங்கத்தில் நடப்பு வீரர்களும் பங்கு பெற்றுள்ளனர். மேலும், தற்போதைய நிலையில் ஐசிஏ அமைப்பானது, ஃபெடரேஷன் ஆஃப் இண்டர்நேஷனல் கிரிக்கெட்டர்ஸ்’ அசோசியேஷனுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை.

முன்னாள் வீரர்களின் நல்வாழ்விற்காக, ஐசிஏ அமைப்பை ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாக பிசிசிஐ பதிவு செய்துள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பாக இதை பதிவுசெய்துள்ளது பிசிசிஐ.

தற்போதைய நிலையில், ஐசிஏ அமைப்பில் கபில்தேவ், அஜித் அகர்கர் மற்றும் முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஆகியோர் தொடக்கநிலை இயக்குநர்களாக உள்ளனர். வரும் நாட்களில் நடைபெறும் அமைப்பு தேர்தலில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.