2019 உலகக் கோப்பை: போட்டியில் பங்கேற்கும் அணிகள் குறித்து நாடுகள் அறிவிக்கும் விவரம்…

ஐசிசி உலகக் கோப்பை 2019 வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில்,  உலக கோப்பை அணியில் ஆடும் வீரர்கள் குறித்து அதில் பங்கேற்கும் நாடுஎள் எப்போது அறிவிப்பும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே இந்தியா வரும் 15ந்தேதி தனது அணியை அறிவிக்கும் என கூறி உள்ள நிலையில் மற்ற நாடுகளும் விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது. ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் அனைத்தும் ஏப்ரம் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி உள்ளது.

2–வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி  தொடங்கி  ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி. கவுன்சில் ஏற்கனவே  அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

1992–ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளில் முதல் முறையாக ரவுன்ட் ராபின் அடிப்படையில் லீக் சுற்று நடக்கிறது. அதாவது பங்கேற்கும் 10 அணி களும் தங்களுக்குள் தலா ஒரு முறை சந்திக்க வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இங்கிலாந்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்–இரவு ஆட்டங்களில் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16–ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

இதே போல் எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா–இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9–ந்தேதி லண்டன் ஓவலில் அரங்கேறுகிறது.

இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14–ந்தேதி நடக்கிறது. ஜூலை 15–ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும்.

ஐசிசி உலகக் கோப்பை 2019 போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் அனைத்தும் ஏப்ரம் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஆனால், மே23 வரை அணியில் மாற்றங்களை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.

10 அணிகள் கலந்து கொள்ளும் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி மட்டுமே 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

இந்தியா 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியை ஏப்ரல் 15ம் தேதி அறிவிக்கிறது.

தென்னாப்பிரிக்கா ஏப்ரல் 18ம் தேதி அணியை அறிவிக்கிறது. மே 12ம் தேதி பயிற்சி முகாமை துவங்குகிறது.

2017 சாம்பியன் கோப்பை சாம்பியனான பாகிஸ்தான் ஏப்ரல் 23ம் தேதி அணியை அறிவிக்கிறது. ஏற்கெனவே 23 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்துவிட்டது.

பங்களாதேஷ் அணி ஏப்ரல் 15-20 தேதிக்குள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே 23 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்துவிட்டது. தற்போது தென்னாப்பிரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அணி அறிவிப்பு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளின் அணி அறிவிப்பு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள் 

ஜூன்.5: தென்ஆப்பிரிக்கா -சவுதம்டன்

ஜூன்.9:  ஆஸ்திரேலியா- தி ஓவல்

ஜூன்.13:  நியூசிலாந்து -நாட்டிங்காம்

ஜூன்.16: பாகிஸ்தான் -மான்செஸ்டர்

ஜூன்.22: ஆப்கானிஸ்தான்- சவுதம்டன்

ஜூன்.27: வெஸ்ட் இண்டீஸ்- மான்செஸ்டர்

ஜூன்.30: இங்கிலாந்து -பர்மிங்காம்

ஜூலை.1: வங்காளதேசம் -பர்மிங்காம்

ஜூலை.6:  இலங்கை லீட்ஸ்

Leave a Reply

Your email address will not be published.