துபாய்:
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியானது.

8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் 2021  பிப்ரவரி-மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  அறிவித்தது. இதன்படி நியூசிலாந்தில் உள்ள 6 நகரங்களில் 2022-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் எஞ்சிய 3 அணிகள் எவை என்பதை நிர்ணயிப்பதற்கான தகுதி சுற்று இலங்கையில் அடுத்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.

உலக கோப்பை போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் (மார்ச் 4-ந் தேதி) நியூசிலாந்து அணி தகுதி சுற்றின் மூலம் முன்னேறும் அணியை சந்திக்கிறது. இந்திய அணி தனது முதலாவது லீக்கில் (மார்ச் 6-ந் தேதி) தகுதி சுற்றில் மூலம் களம் காணும் அணியுடன் மோதுகிறது.