துபாய்: ஐசிசி அமைப்பின் தலைவராக இருந்த இந்தியாவின் சஷாங்க் மனோகர், அப்பதவியிலிருந்து விலகினார். அவர் மொத்தம் 4 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.
தற்போது 62 வயதாகும் சஷாங்க் மனோகர், ஐசிசி தலைவர் பதவிக்கு மொத்தம் 2 முறை தேர்வுசெய்யப்பட்டார். இவரது பதவிகாலம் முடிவடைந்த நிலையிலும், கூடுதலாக 2 மாதங்கள் பதவியில் இருந்தார். இந்நிலையில், தற்போது பதவி விலகியுள்ளார்.
இதனையடுத்து புதிய சேர்மன் பதவிக்கு போட்டி உருவாகியுள்ளது. பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி, இங்கிலாந்தின் கோலின் கிரேவ் மற்றும் வெஸ்ட் இண்டீசின் டேவ் கேமரான் ஆகியோர் மோதுவர் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிய தலைவர் தேர்வுசெய்யப்படும் வரை, ஐசிசி அமைப்பின் தற்போதைய துணைத் தலைவராக உள்ள இம்ரான் குவாஜா, தற்காலிக தலைவராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.