சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை!

எட்ஜ்பஸ்டன்:
நாளை நடைபெற இருக்கும்  8-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையே நாளை ஆட்டம் நடைபெற உள்ளது.

தற்போதைய  சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நகர ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில்தான் இரு அணிகளும் மோதின. அப்போது, இந்தியா 76 ரன்னில் பாகிஸ்தானை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது.

ஆட்டத்தைக்காண இந்தியா முழுவதும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

நாளைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ஷிகார் தவான், யுவராஜ்சிங், ரகானே, டோனி, ரவிந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஸ்வர்குமார், பும்ரா, முகமது ‌ஷமி, உமேஷ்யாதவ், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா.

பாகிஸ்தான்: சர்பிராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், பாபர் ஆசம், சோயிப் மாலிக், அசார் அலி, முகமது ஹபீஸ், முகமது அமீர், சொகைல் ஆரீப், ஜூனைத்கான், வகாப் ரியாஸ், பகீம் அஸ்ரப், பக்சர் உமான், ஹசன் அலி, இமாத் வாசிம், சதாப்கான்.

இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.