லண்டன்:

லககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை ஆடிய ஆட்டங்களில் தொடர் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்திலாவது தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் இன்று  மாலை 6 மணி அளவில் கார்டிப் நகரில் நடை பெறுடிகிறது. இன்றைய போட்டடி தென்னாப்பிரிக்கா அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் அந்த அணிக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது. அரை இறுதிக்கான வாய்ப்பை பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள தென் ஆப்பிரிக்க அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியாஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியடைந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

அதுபோல தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தானும் இதுவரைவெற்றி கணக்கை தொடங்கவில்லை. இருந்தாலும் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில், பலம் வாய்ந்த அணிகளுக்கு நிகராக ஆடி  குறைந்த ரன்களிலேயே  (207, 152, 172) தோல்விகளை சந்தித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் இல்லாததால், அந்த அணி ரன்களை எடுப்பதில் தடுமாறி வருகிறது.

இந்த நிலையில் இன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அதே வேளையில் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, ஆட்டம் நடைபெற உதவுமா என்பதையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.