உலக கோப்பை கிரிக்கெட்2019: இலங்கை ஆஸ்திரேலியா இடையே இன்று போட்டி

லண்டன்:

ங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டம் இலங்கைக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 20வது லீக் ஆட்டம் இன்று லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில்  பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றியும் ஒரு தோல்வுயும் அடைந்து,  6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய நிலையில் 3-வது ஆட்டத்தில் இந்திய அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. தனது 4-வது ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த நிலையில், இன்று இலங்கையை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத் துக்கு  முன்னேறும். ஏற்கனவே நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசி பார்முக்கு திரும்பியுள்ள டேவிட்வார்னரிடம் இருந்துமீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். கேப்டன்ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான்கவாஜா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்அணியை முன்னின்று வழிநடத்துகிறார்.

அதே வேளையில் இலங்கை அணி கேப்டன் திமுத் கருணாரத்னே தலைமையிலான அணி, 4 ஆட்டங்களில் விளையாடி 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இதில் இரு ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டிருந்தது.

முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டி ருந்த இலங்கை அணி அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூஸிலாந்து அணியிடம் 136 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  வெற்றிபெற்றது.  இன்றைய ஆட்டத்தில் அந்த அணி பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதில் முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் நூவன் பிரதீப் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும். தனது மாமியாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள தாயகம் சென்றிருந்த மலிங்காவும் அணியினருடன் மீண்டும் இணைந்துள்ளார். தனது வலுவான யார்க்கர்களால் மலிங்கா நெருக்கடி தருவார் என்றும் நம்பப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ICC Cricket World Cup 2019, SL vs AUS
-=-