உலக கோப்பையை வெல்லும் அணியின் பரிசுதொகை எவ்வளவு தெரியுமா?

கிரிக்கெட் ரசிகர்களிடையே  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக கோப்பை தொடர் வரும் 30ந்தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில்  தொடங்குகிறது. இந்த தடவை உலக கோப்பையை வெல்வது யார் என்ற விவாதங்கள் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்ட உலககோப்பை போட்டியில் இந்தியா உள்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன.  வரும் 0 ஆம் தேதி போட்டிகள் தொடங்கி ஜூலை14ந்தேதி  வரை என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்  உலக கோப்பை போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்  அறிவித்துஉள்ளது. அதன்படி உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பரிசு தொகை கிடைக்க உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு  ரூ.26 கோடியும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த  தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.70 கோடியாகும்.

கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் 28.05 கோடி) பரிசாக வழங்கப்படும்.

2வது இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 14.02 கோடி) கோடி வழங்கப்பட உள்ளது.

அரைஇறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம். (கடந்த போட்டியின்போது,  அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது)

லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் (40 ஆயிரம் டாலர்கள் கிடைக்கும்.

லீக் சுற்றை கடந்துவிட்ட அணிகளுக்கு ஒரு லட்சம் டாலர் (ரூ.70,12,820) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகக்கோப்பையில் இறுதி போட்டியில் வெல்லும் அணிக்கு அதிகபட்ச பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி மற்றும் இதர அணிகளுக்கும் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.

கார்ட்டூன் கேலரி