ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோலி, பும்ரா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற நிலையில் இந்திய அணி வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஒருநாள் அரங்கில் கோலி மற்றும் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

icc

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. அதன்பின்னர் நடைபெற்ற 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற நிலையில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதன்படி கேப்டன் விராட் கோலி ஐசிசி தரவரிசை ஒருநாள் அரங்கில் முதலிடத்தை பிடித்திருந்தார். தரவரிசையில் மேலும் 15 புள்ளிகள் அதிகம் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல் பவுலர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 3வது இடத்திலும், சாஹல் 8வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா 2வது இடத்தில் நீடிப்பதுடன் 871 புள்ளிகளை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.