ஐசிசி ஒருநாள் தரவரிசை – முதலிடத்தில் நீடிக்கும் விராத் கோலி!

துபாய்: ஒருநாள் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இந்தியக் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஒருநாள் போட்டி பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐசிசி. இப்பட்டியலில் 871 புள்ளிகளைப் பெற்ற கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 855 புள்ளிகளைப் ப‍ெற்ற ரோகித் ஷர்மா இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 829 புள்ளிகளைப் ப‍ெற்று மூன்றாமிடத்தில் உள்ளார்.

ஒருநாள் பவுலர்கள் தரவரிச‍ையில் நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பும்ரா 719 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி