துபாய்: ஐசிசி வெளியிட்ட ஒருநாள் ‍போட்டி பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில், முதலிரண்டு இடங்களை, இந்திய கேப்டன் விராத் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய இருவரும் தக்கவைத்துள்ளனர்.

விராத் கோலி மொத்தம் 870 புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் 2 அரைசதங்களை அடித்ததே இதற்கு முக்கிய காரணம். அதேசமயம், ரோகித் ஷர்மா பெற்றதோ 842 புள்ளிகள்.

மூன்றாமிடத்தில், 837 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் பாபர் ஆஸம், நான்காமிடத்தில் 818 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் ராஸ் டெய்லரும், ஐந்தாமிடத்தில் 791 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்சும் உள்ளனர்.

பவுலர்களுக்கான தரவரிசையில், நியூசிலாந்தின் டிரன்ட் பெளல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். ஆப்கானிஸ்தானின் முஜிப் உர் ரஹ்மான் 708 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், மூன்றாமிடத்தில் 700 புள்ளிகளுடன் இந்தியாவின் பும்ரா மூன்றாமிடத்திலும் உள்ளனர்.