லண்டன்

இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றி அமைத்தவர் என தோனியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகழ்ந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி ரசிகர்களின் பெரும் பாராட்டுக்களை இன்றும் பெற்று வருகிறார். அவர் தலமையில் நடந்த கடந்த 2011 ஆம் ஆண்ட் உலகக் கோப்பை, 2007 வருட டி 20 உலகக் கோப்பை ஆகிய போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியது. அவருக்கு நேற்று முன் தினம் 38 வயதானதை முன்னிட்டு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒர் வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ குறித்த டிவிட்டர் பதிவில், “இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய ஒரு பெயர், உலகெங்கும் பல கோடி கணக்கானவர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் ஒரு பெயர், யாராலும் மறுக்க முடியாத ஒரு புகழ் கொண்ட பெயர் எம் எஸ் தோனி. இது ஒரு பெயர் மட்டும் இல்லை. இந்திய அணி” என புகழ்ந்துள்ளது.

இந்த வீடியோவில் விராட் கோலி, “வெளியில் இருந்து நாம் காண்பதற்கும் ஒரு மனிதனின் உட்புற செய்கைக்கும் முற்றிலும் வேறு பாடு உண்டு. தோனி எப்போதும் அமைதியாகவும், ஆர்ப்பாட்டமின்றியும் இருந்த போதிலும் அவரிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளமாக உள்ளது. அவர் எனக்கு  எப்போதும்  தலைவர்.  எங்களுக்குள் உள்ள புரிதல் அபாரமானது. நான் அவர் அறிவுரை மூலம் என்றும் பலவற்றை கற்றுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ICC/status/1147369582392295424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1147369582392295424%7Ctwgr%5E393039363b636f6e74726f6c&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fsports%2Fcricket%2Ficc-world-cup%2Fname-that-changed-the-face-of-indian-cricket-icc-on-dhoni%2Farticleshow%2F70102990.cms

மற்றொரு விரரான பும்ரா, “நான் கடந்த 2016 ஆம் வருடம் அணியில் இணைந்த போது அவர் அணித்தலைவராக இருந்தார். அவருடைய அமைதியான அணுகுமுறை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.” என தெரிவித்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவில் தோனியை பாராட்டி உள்ளனர்.