ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் – இந்திய வீரர்களுக்கான இடங்கள்!

துபாய்: டெஸ்ட் போட்டிகள் தொடர்பாக ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்தியக் கேப்டன் விராத் கோலி, பேட்ஸ்மென்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை ஒருநாள் & டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில், சமீபத்தில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில், 928 புள்ளிகளுடன் விராத் கோலி முதலிடம் வகிக்கிறார்.

அதேசமயம், மற்றொரு டெஸ்ட் நட்சத்திரம் புஜாராவுக்கு கிடைத்தது 6வது இடம். அவர் பெற்ற புள்ளிகள் 791.
759 புள்ளிகள் பெற்ற ரகானே, 9வது இடத்திலிருந்து 8ம் இடத்திற்கு முன்னேறினார்.

பந்து வீச்சாளர்கள் வரிசையில், பும்ராவுக்கு 6வது இடமும்(794 புள்ளிகள்), அஸ்வினுக்கு 8வது இடமும்(772 புள்ளிகள்), முகமது ஷமி 10வது இடமும்(771 புள்ளிகள்) பெற்றுள்ளனர்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் இருப்பது வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர்.