2018ம் ஆண்டிற்கான ஐசிசி டி20 அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி டி20 ஓவர் மகளிர் தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக அவருக்கு இந்த கவுரம் கிடைக்கப்பெற்றது.

womens

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் பல்வேறு வகைகளில் ஜொலிக்கக்கூடிய வீரா்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐசிசி-யின் 2018-ம் ஆண்டுக்கான மகளிர் டி-20 அணியின் கேப்டனாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்றும் தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தானா, சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோர் டி-20, ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் அணிக்கு தேர்வாகியுள்ளனர். கடந்த ஆண்டில் 25 போட்டிகளில் விளையாடிய ஹா்மன்ப்ரீத் கவுா் 663 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் 3வது இடத்தை பிடித்துள்ளாா்.

அதுமட்டுமின்றி, ஹா்மன்ப்ரீத் கவுா் தலைமையிலான இந்திய மகளிா் அணி உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதி வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஐசிசி டி20 அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுளார்.

சமீப காலமாக ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இணையாக இந்திய மகளிா் அணி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.