ஐசிசி டெஸ்ட் தரவரிசை – கோலி 2ம் இடம், பும்ரா 9ம் இடம்!

துபாய்: டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் விராத் கோலி இரண்டாமிடத்தில்(886 புள்ளிகள்) இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித்(911) புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

உலகளாவிய பேட்டிங் மற்றும் பந்துவீச்சிற்கான தரவரிசைப் பட்டியலை, அவ்வப்போது ஐசிசி வெளியிடுவது வழக்கமே.

பாகிஸ்தானின் பாபர் ஆஸம்(798 புள்ளி) ஐந்தாம் இடத்திற்கு முன்னேறினார். பந்துவீச்சைப் பொறுத்தவரை, இந்தியாவின் பும்ரா(779 புள்ளி) ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்(846 புள்ளி) இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ்(904 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.

You may have missed