துபாய்: டெஸ்ட் போட்டி தொடர்பாக ஐசிசி வெளியிட்ட இந்த ஆண்டின் கடைசி தரவரிசைப் பட்டியலில், பேட்ஸ்மென்கள் பிரிவில் இந்தியக் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

பவுலர்கள் பிரிவில், இந்தியாவின் பும்ரா மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார். அவருக்கு 6வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

விராத் கோலி பெற்றுள்ள புள்ளிகள் 928. இரண்டாவது இடத்தில் வந்துள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 911 புள்ளிகள் பெற்றுள்ளார். மூன்றாமிடம் பெற்ற நியூசிலாந்தின் வில்லியம்சனுக்கு 864 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் புஜாரா 4வது இடத்திலும், ரஹானே 7வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சு பட்டியலை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் அஸ்வின் மற்றும் முகமது ஷமி மற்றும் ஆகியோர் முறையே 11 மற்றும் 12 வது இடங்களில் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் தரவரிச‍ையின்படி, முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் முதலிடத்திலும், இந்தியாவின் ஜடேஜா இரண்டாமிடத்திலும், இங்கிலாந்தில் ஸ்டோக்ஸ் மூன்றாமிடத்திலும் உள்ளனர். இப்பட்டியலில் இந்தியாவின் அஸ்வினுக்கு 6வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

அணிகளுக்கான தரவரிச‍ையில் 120 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து இரண்டாமிடத்திலும், தென்னாப்பிரிக்கா மூன்றாமிடத்திலும் உள்ளன.