டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் – நியூசிலாந்து அணி 3வது இடத்திற்கு முன்னேற்றம்!

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தனது முதலிடத்தை தக்கவைத்து கொண்டது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணி அதிரடியாக முன்னேற்றம் அடைந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

acheiment

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் வ்ளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 108 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி 2வது இடத்தில் உள்ளது.

newsilandh

அதே நேரத்தில் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளது. இது தென் ஆப்பிரிகாவை விட அதிக புள்ளிகள் பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், இங்கிலாந்து 2வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா 4வது இடத்திலும், ஆஸ்திரேலியா 5வது இடத்திலும் உள்ளன.