பெண்கள் டி20 உலக கோப்பை: ஷபாலியின் அதிரடியால் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியஅணி
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலக கோப்பை போட்டியில், இன்று நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
இந்திய வீராங்கனை ஷபாலி வர்மாவின் அதிரடியான ஆட்டத்தால், நியூஸிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 21ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. குரூப் – ஏ பிரிவில் இன்று நடைபெற்ற 9 வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி மட்டையுடன் களத்தில் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அசத்தினர. அவருடன் சேர்ந்த களத்தில் இறங்கிய ஸ்மிருதி மந்தனா 11 ரன்கள் எடுத்த நிலையில், வெளியேறிய நிலையில், ஆட்டமும் சூடுபிடித்தது. ஷபாலி 34 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஆட்டமிழந்தார. அவர், 4 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தி ருந்தார். அடுத்து களமிறங்கயி தானியா பாட்டியா 23 ரன்னிலும், ரோட்ரிகஸ் 10 ரன்னும் எடுத்த நிலையில், ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து களமிறங்கிய ஷிகா பாண்டே 10 ரன்னிலும், ரூபா யாதவ் 14 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களத்தில் குதித்தது. ஆனால், இந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. கடைசி ஓவரில் கெர் அதிரடி ஆட்டம் ஆடினார். கடைசி ஓவரில் 4 பந்துகளில் 7 ரன்கள் கிடைத்தது. ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரி அடிக்க ஆடுகளம் பரபரப்பு அடைந்தது. கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் நியூசிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலையில், கடைசி பந்தில் அவர் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கெர் 19 பந்துகளில் 34 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்து 4 ரன்களில்தோல்வி அடைந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி. அரையிறுதிக்கு தகுதி பெற்றது
இந்தியத் தரப்பில் பாண்டே, பூனம்யாதவ், பாண்டே, கெய்க்வாட், யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்
இன்றைய ஆட்டத்தில் ஷபாலியின் ஆட்டம் பிரதமாதமாக இருந்தது. ஏற்கனவே 16 வயதே ஆன ஷபாலி ஏற்கனவே நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியாக பேட்டிங் செய்திருந்தார்.
பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வரும், இந்திய மகளிர் அணியினர் தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக அணிகள் இந்திய பெண்கள் அணியின் ஆட்டத்தை வியப்போடு பார்த்து வருகின்றனர்.