ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

டெர்பி,

ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

இதுவரை எதிர்கொண்ட 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று  இந்திய பெண்கள் கிரிக்கெட் சாதனை படைத்து வருகிறது.

இங்கிலாந்தின் டெர்பி நகரில் நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.  தீப்தி 78 ரன்களும், மிதாலி ராஜ் 53 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களைக் குவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்திய மகளிர் அணி, நாளை  நடைபெறும் அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ICC Women's World Cup: India defeat Sri Lanka, ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தியது இந்தியா
-=-