கொழும்பு:

சிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்றின் சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

கொழும்பு, என்சிசி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதைத்தொடர்ந்து வங்கதேசம் மட்டையை பிடித்தது.  50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது வங்கதேசம்..

வங்க தேச வீராங்கனைகளான  ஷர்மின் 35, பர்கான் 50, நிகர் சுல்தானா 18 ரன் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சில் மான்சி ஜோஷி 3, தேவிகா 2, ஷிகா, ராஜேஸ்வரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா அணி  33.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து எளிதாக வென்றது.

தீப்தி ஷர்மா 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மோனா மேஷ்ராம் 78 ரன் (92 பந்து, 12 பவுண்டரி), கேப்டன் மித்தாலி ராஜ் 73 ரன் (87 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 2 புள்ளிகள் பெற்றது.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா 4 லீக் ஆட்டங்களில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் தலா 4 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன.

நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.