இந்திய அணியின் பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்த லண்டன் பத்திரிகையாளர்கள்

லண்டன்:

இந்திய அணி ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை லண்டன் பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல், வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்களான கலீல் அகமது, ஆவேஷ்கான், தீபக் சாஹர ஆகியோரை வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முயன்றதால், கோபமடைந்து லண்டன் பத்திரிகையாளர்கள் புறக்கணித்துள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்த இந்திய அணி நிர்வாகம், இருவரும் தாய் நாட்டுக்கு திரும்பிவிடுவார்கள் என்பதால், அவர்களை பத்திரிகையாளர்களை சந்திக்க வைத்தோம் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது, அணியில் இடம்பெறாத வீரர்களையும், வலைப் பயிற்சியில் மட்டும் பந்து வீசும் வீரர்களை வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினால் எப்படி அதில் பங்கேற்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Cricket World Cup match, லண்டன் பத்திரிகையாளர்கள்
-=-