டில்லி:

ட்டை விரல் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து ஷிகர் தவானுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குவார் என்று பிசிசிஐ தெரிவித்து உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற  போட்டியில் இந்திய அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய வீரர் ஷிகர் தவான் 100 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை புரிந்தார். ஆட்டத்தின்போது, அவரது  இடதுகை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது.

இதன காரணமாக, அவருக்கு.மூன்று வாரம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், அவருக்கு 3 வாரம் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதையடுத்து, அவருக்கு பதில் யார் களம்  இறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இளம் வீரரான ரிஷப் பந்த்துக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

ரிஷப் பந்த் உடடினயாக இங்கிலாந்து வர பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

ஷிகர் தவான்  இடத்துக்கு அதிரடி வீரர் ரிஷப் பந்த் வரவேண்டும் என்று சுனில் கவாஸ்கரும், கெவின் பீட்டர்சனும் கூற, ராயுடு வேண்டும் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்நாள் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் உள்பட சிலர் கருத்துக்கள் தெரிவிக்க பிசிசிஐ ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.

ஆனால்,இவர் தொடக்க வீரராக களமிறக்கப்பட மாட்டார் என கூறப்படுகிறது. தொடக்க ஆட்டக்ககாரராக தவானுக்கு பதில்  கே எல் ராகுலை களமிறக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஆனால், அப்படி செய்தால் நான்காவது இடத்தில் ஆடுவதற்கு சரியான வீரர்கள் இல்லாமல் போய்விடும். எனவே,  தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் போன்றோரை இறக்கலாம் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.