லண்டன்:

நாங்கள் மூழ்க்கிக்கொண்டிருக்கிறோம், எங்களுடன் உங்களையும்  சேர்த்து அழைத்துச் செல்கி றோம் என்று பங்களா தேஷ் அணியை சீண்டியுள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பாதீன்.

உலககோப்பை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விறுவிறுப்பாக  நடைப்பெற்று வருகிறது. இதுவரை 30 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 31வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இன்றைய போட்டி  சவுத்தாம்டன் நகரில் இருக்கும் தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த இரு அணிகளும் உலகக்கோப்பையில் ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. அந்த போட்டி யில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி  பங்களாதேஷ் அணி வெற்றியை பெற்றது. எனவே,  இன்று நடைபெறும்  பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் திறமையான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள தங்களது அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தும் என தெரிவித்து உள்ளார்.

முதல் நான்கு போட்டிகளில் நாங்கள் மோசமாக தோற்றாலும், வலுவான அணிகளான இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாகவே விளையாடினோம். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் தோல்விக்குப் பிறகு நாளுக்கு நாள் நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம்  என்று கூறிய குல்பாதீன்  ஒரு அனுபவமற்ற அணி உலகின் நம்பர் ஒன் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல, இப்போது நாளுக்கு நாள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நினைக்கிறேன். இது தான் உண்மையில் நான் விரும்பிய அணியின் செயல்பாடு என்று தெரிவித்து உள்ளார்.

உலக கோப்பையில் இதுவரை ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய ஆறு போட்டியிலும் தோல்வியை தழுவி உள்ளது. அதே நேரத்தில் பங்களாதேஷ் ஆறு போட்டிகளில் இருந்து ஐந்து புள்ளிகளுடன் கணக்கிடப்படுகிறது

இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதீன், கூறும்போது, நாங்கள் ஏற்கனவே மூழ்கிக்கொண்டிருக்கிறோம்… எங்களுடன் உங்களையும் அழைத்துச் செல்கிறோம் என்று சிரித்தபடி கிண்டலாக கூறினார்.

கடந்த இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான்  அணி சிறப்பாக ஆடி சீராக முன்னேறியுள்ளது, மேலும் சில உயர் மதிப்பிடப்பட்ட சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தனது அணி, உலகின் சிறந்த அணியை வீழ்த்தி வேறு என்ன தேவை என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களான  ஹஸ்ரத்துல்லா ஜசாய்,  முகமது நபி
ரஷீத் கான் போன்றவர்களை கொண்டு இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பில் ஆப்கானிஸ்தான் அணி தீவிரமாக களமிறங்க உள்ளது.

அதேவேளையில்,பங்களாதேஷ் அணியில், தமீம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், முஸ்தாபிஸூர்  ரஹ்மான் போன்றவர்களும் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல.

இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது. வெற்றிக்கனியை ஆப்கானிஸ்தான் கைப்பற்றுமா?