டில்லி:

லகக் கோப்பை கிரிக்கெட்2019 வரும் 30ந்தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில், 24ந்தேதி முதல் 28ந்தேதி வரை நடைபெறும் பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவனையை ஐசிசிஐ வெளியிட்டு உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ந்தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில், கோப்பையை வெல்லப்போவது யார் என்று கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணி நேற்று இரவு இங்கிலாந்து புறப்பட்டு சென்றது.

இந்த ஆண்டு நடைபெறும்  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்கிறது. போட்டிகள் அனைத்தும்  இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது.  வரும் மே 30 ஆம் தேதி போட்டிகள் தொடங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது.  அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக உலக கோப்பை ஆட்டத்தில் பங்கேற்ற்கும் முன்பு ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது. அதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது. பயிற்சி ஆட்டம் மே 24 முதல் மே 28 வரை பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.

மே 24: 
முதல் பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
2_வது பயிற்சி ஆட்டம்: இலங்கை vs தென் ஆப்ரிக்கா

மே 25: 
3_வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
4_வது பயிற்சி ஆட்டம்: இந்தியா vs நியூசிலாந்து

மே 26: 
5_வது பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தான் vs வங்கதேசம்
6_வது பயிற்சி ஆட்டம்: தென் ஆப்ரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்

மே 27: 
7_வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்
8_வது பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா vs இலங்கை

மே 28: 
9_வது பயிற்சி ஆட்டம்: இந்தியா vs வங்கதேசம்
10_வது பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்