பனி லிங்கம்: அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடக்கம்

ஸ்ரீநகர்:

னி லிங்கத்தை காணும் அமர்நாத் குகைக்க்கு செல்லும் யாத்திரை வரும் 28ந்தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகையில் தானாகவே உருவாகும்  பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  ஆண்டுதோறும் அமர்நாத் வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை இந்த மாதம் 28ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 60 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  அமர்நாத் யாத்ரிகர்கள் செல்லும்  வாகனங்களை செயற்கைக் கோள் மூலம் கண்காணிப்பது, செல்போன் ஜாமர்கள், சிசிடிவி கேமராக்கள், குண்டு வீச்சு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க நிலவறைகள், வெடிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் என  பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரகிறது.

மேலும்,   22,500 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும்,  மாநில போலீசாரும் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட துணை ராணுவ படைகள், ராணுவ வீரர்கள்  யாத்திரை பாதையில் குவிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையின்போது,  2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தது குறிப்பிடத்தக்கது.