ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா: பனாமா லீக்ஸ் எதிரொலி

பனாமா லீக்ஸ்-ன் முதல் பலியாடாக,  ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.

ISLAND PRIMEMINISTER

தற்பொழுதைய பிரதமர்  “சிக்முந்துர் டேவிட் கன்லௌக்சன் (Sigmundur Davíð Gunnlaugsson)” வெளிநாட்டில் தன் பெயரில் முதலீடு செய்ததும் தற்பொழுது அதனை அவரது மனைவி  “அன்னா சிகுர்லௌக் பால்ஸ்டாட்டிர் (Anna Sigurlaug Pálsdóttir)”யின் பெயரிலும் உள்ள சொத்தின் விவரம், பனாமா லீக்ஸ்-ன் முதல் பட்டியலில் வெளியானது.

இதனை அடுத்து , அங்குள்ள எதிர்கட்சிகள் போராட்டத்தினை அறிவித்தன.

இதனை அடுத்து தன் பதவிக்கு ஆபத்து என்பதை உணர்ந்த பிரதமர் தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்.

இந்தத் தகவலை உறுதி செய்த  விவசாயம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர்  சிகுர்துர் இங்கி ஜோஹன்ஸன் (Sigurður Ingi Jóhannsson)  கூறுகையில், “அவர்  பிரதமர் பதவியை மட்டும் தான் ராஜினாமா செய்துள்ளார். அவர் கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார். நான் அடுத்த பிரதமர் ஆக வுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

 

பிரதமர் வரி ஏய்ப்பு செய்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லைஎன்றாலும், எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் விழைவாக அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டில் 2008-ல் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின் மக்கள் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தினை எதிர்பார்க்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.