இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆரின் இயக்குநரான பல்ராம் பார்கவா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மூத்த சுகாதாரத்துறை அதிகாரி பிந்து ஷாஜன் கூறியதாவது:   3 நாட்களுக்கு முன்பாக பல்ராம் பார்கவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான அறிகுறிகள் தான் அவருக்கு தென்படுகின்றன. அவர் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்தார்.