‘பிசாசு 2’ படத்துக்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த சித் ஸ்ரீராம்….!

சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் திரைப்படம் பிசாசு 2. இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இம்மாதம் தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார். அமெரிக்காவில் இருந்த அவர், பாடலின் வரிகளும், மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே அங்கிருந்து சென்னை வந்து இந்தப் பாடலை பாடி கொடுத்துள்ளார்.

மிஷ்கின் – சித் ஸ்ரீராம் கூட்டணியில் ’சைக்கோ’ படத்தில் ’உன்ன நெனச்சு’ என்ற மெலடி பாடல் ரசிகர்களிடம் பெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

https://twitter.com/DirectorMysskin/status/1347929705559719938