ஐடியா: இலவச ஸ்வைப் மிஷின்…!

நெட்டிசன்:

பொன் தங்கராஜ் (Pon Thangaraj) அவர்களின் முகநூல் பதிவு:

உடனடித் தேவை அனைவருக்கும் இலவச சுவைப் மிசின் ஒன்றே.

தற்போதுள்ள மொபைல் போன் அளவிலேயே சுவைப் மிசின் தயாரித்து எல்லா காய் கறி வியாபாரிகள் இட்லிக்காரம்மா மீன் கார அம்மாக்கள் கீரை விற்கும் பெண்கள் சிறு சிறு வியாபாரம் செய்பவர்கள் மண் பாண்டங்கள் விற்பவர்கள் ரோட்டோரக் கடைகள் பிளாட்போர்மில் வாட்ச் ரிப்பேர் செய்பவர்கள் காலனி பழுது பார்ப்பவர்கள் போன்ற அனைத்து மக்களிடமும் கொடுத்து விட்டால் போதும்.

பணப் பரிவர்த்தனைகள் அத்தனையும் கிரடிட் கார்டு டெபிட் கார்டு ஏ டீ எம் கார்டு வழியாகவே நடந்து விடும்.

அனைத்து மக்களின் வருமானமும் அரசுக்குத் தெரிந்து விடுவதால் அவர்கள் கணக்கிலேயே வரி பிடித்தம் செய்வதும் மிக எளிது.

swipre-full

வங்கிகளில் இரண்டாயிரம் ரூபாய் எடுக்க கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.

வரிசையில் நிற்பதை பற்றி சொன்னால் ரேசன் கடை சினிமா தியேட்டர் ராணுவ வீரர்கள் மற்றும் தமிழ் நாட்டில் இலவச ஓடாத மிக்சி கிரைண்டர் விசிறி வாங்க நின்ற கதையைக் கூறி தேச பக்தியைக் காட்டி விடுவார்கள்.

எனவே அதைப் பற்றிப் பேசாமல் அடுத்த தேர்தலின் போதாவது இலவச சுவைப் மிசின் வழங்கப் படும் என்ற அறிவிப்பை வெளியிட்டால் மக்கள் மகிழ்ச்சி அடைவர் .

அரசுக்கும் மிக எளிதாக ஏழை மக்களின் வரி ஏய்ப்பைக் கண்டு பிடித்து வங்கிகளில் பல நூறு ஆயிரம் கோடிகள் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிக்கும் பெரு வணிகர்களின் வாராக் கடன்களை ரைட் ஆப் செய்ய வசதியாய் இருக்கும் .

இப்போதிய உடனடித் தேவை அனைவருக்கும் இலவச சுவைப் மிசின் ஒன்றே.

அதையும் பழுதானால் சர்வீஸ் செய்வத்தற்கு டெண்டர் விட்டு விடலாம் சம்பந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா