டில்லி,

தொலைதொடர்பு சேவைகளில நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் போட்டிகளை சமாளிக்க ஐடியா – வோடபோன் நிறுவனங்கள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது..

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளில், ஏர்டல், ஐடியா, வோடபோன், ஏர்செல், பிஎஸ்என்எல், ஜியோ போன்ற நிறுவனங்கள் உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 5ந்தேதி ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையை தொடங்கி மார்ச் 30 வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கி வருகிறது.

இதன் காரணமாக அனைத்து தொலைதொடர்பு  நிறுவனங்களின் தொலைதொடர்பு சேவைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் தொலைதொடர்பு சேவையில் இருக்கும் வோடோபோன் நிறுவனம், தனது இந்திய பிரிவை ஐடியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், வோடோபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐடியா நிறுவனத்தின் தலைமையான ஆதித்ய பிர்லா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த முயற்சி நடப்பதாக வோடோபோன் தெரிவித்துள்ளது.

இந்த இணைப்பின் மூலம், ஐடியா நிறுவனம் வோடபோனுக்கு புதிய பங்குகளை தரும். இதன் மூலம் வோடபோன் இந்தியா பிரிவு வோடபோனிலிருந்து பிரியும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது