தாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்! வைரலாகும் வீடியோ….

சீனா:

தாயின் கருப்பையில் இருந்த இரட்டை  குழந்தைகள், ஒருவருக்கொருவர்  செல்லமாக  சண்டையிடும் காட்சி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் தெரிய வந்தது. இது தொடர்பாக வீடியோ வைரலாகி வருகிறது. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவை சேர்ந்த  ஒரு இளம்பெண், தனது வயிற்சில் வளர்ந்த குழந்தை குறித்து ஸ்கேன் செய்ய, ஸ்கேன் மையத்திற்கு சென்றார்.  அந்த பெண்ணை மருத்துவா்கள் ஸ்கேன் செய்து பாா்த்தபோது, வியப்பை ஏற்படுத்தியது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தப்போது, கருப்பையினுள் இருந்த இரட்டை குழந்தைகளும் ஒருவருக்கொருவர்,  சண்டையிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. இதை கண்ட மருத்துவர்களும், குழந்தைகளின் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த வீடியோவை அந்த தம்பதிகள்,  இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து விட்டது. அந்த பெண் விரும்பி சாப்பிடும் பழங்களான செர்ரி மற்றும் ஸ்டிராபெரி என்பனவற்றின் பெயரை தன்னுடைய மகளுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார்.