அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தவல்ல வேகப்பந்து புயல்கள் யார் யார்?

ஷார்ஜா: உலகக்கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில், உலக கிரிக்கெட்டில் அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தக்கூடிய 4 இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜோஃப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து அணியில் கடந்த மார்ச் மாதம்தான் அறிமுகமானார் இந்த வெஸ்ட் இண்டீஸ் பூர்வீகம் கொண்ட வீரர். ஆனால், உலகக்கோப்பையில் இங்கிலாந்து சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்றார். மொத்தம் 11 போட்டிகளில், 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர்.

ஜஸ்பிரிட் பும்ரா

உலகக்கோப்பை தொடரில் சிறந்த எகனாமியுடம் பந்துவீசிய இந்திய வேகப் புயல் பும்ரா. சிறந்த டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். எந்த சூழலிலும் எப்படியும் வீசக்கூடியவர். ரன்களைக் கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டுகளையும் எடுக்கக்கூடியவர். அடுத்த சில ஆண்டுகளுக்கு இவரின் ஆதிக்கம் இந்திய அணியில் மட்டுமின்றி, உலகளவிலும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷகீன் ஷா அஃப்ரிடி

பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் ஷகீன் ஷா அஃப்ரிடி, உலகக்கோப்பையில் மொத்தம் 5 போட்டிகளில் மட்டுமே ஆடி, மொத்தம் 16 விக்கெட்டுகளை அள்ளி அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளினார். அடுத்த சில ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என்று கூறப்படுகிறது.

முஸ்தாபிசூர் ரஹ்மான்

வங்கதேச அணியின் பந்துவீச்சு தூணாக திகழ்ந்து வருகிறார் இந்த இளம் வேகப்பந்து வீச்சாளர். உலகக்கோப்பையில் மொத்தம் 8 போட்டிகளில் ஆடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் போனாலும், இவரின் செயல்பாடு பலராலும் பாராட்டப்பட்டது. இவர், அடுத்த சில ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.