இதற்குதானே ஆசைப்பட்டாய்.. நடிகருக்கு ஆண்குழந்தை..

விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இதற்கு தானே ஆசைப்பட்டாய் மற்றும் ரங்கூன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருப்பவர் டேனியல் அன்னி போப். அவரது மனைவி டெனிஷா நிறைமாத கர்ப்பமாக இருந் தார். இந்நிலையில் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று ஆண் குழந்தை பிறந்தது.


இதுகுறித்து டேனியல் அன்னி போப் டிவிட்டர் பக்கத்தில்,’இன்று இறைவன் ஆசியால் தந்தையானேன். ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து குழந்தைக்கு உங்கள் எல்லோரிடம் ஆசியும் பிரார்த்தனையும் கிடைக்க வேண்டும்’ என தெரிவித்திருக்கிறார்.

கார்ட்டூன் கேலரி